28 நாட்களில் 32,055 பேர்.. சட்டசபை பார்வையாளர்கள் குறித்து சபாநாயகர் தகவல்

Published On:

| By Pandeeswari Gurusamy

Tamil Nadu Assembly Session Begins

சட்டப்பேரவை நிகழ்வுகளைக் காண 28 நாட்களில் 32,055 பேர் வருகை தந்துள்ளனர் என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவடைகிறது. சட்டப்பேரவையை 2021 – 2025 வரை சுமார் 20,000 பேர் மட்டுமே ஒரு ஆண்டுக்கு நேரில் பார்க்க வந்த நிலையில், நடப்பு ஆண்டில், விஜய் தலைமையிலான தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து நடத்தப்பட்ட 28 நாட்கள் நடந்த கூட்டத்தொடரை 32,055 பேர் பார்க்க வந்துள்ளனர் என்று சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ஆண்டு வாரியான விபரங்கள்

2021- 22,651

2023 – 20,137

ADVERTISEMENT

2024 – 10,754

2025 – 20,123

ADVERTISEMENT

2026 – 32,055 (28 நாட்களில் மட்டும்)

மேலும் பல பள்ளிகளில் 11,12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலையில் இருப்பவர்கள் விடுப்பு எடுத்து வந்துள்ளோம் சட்டப்பேரவை நிகழ்வுகளை பார்க்க அனுமதியுங்கள் என்கின்றனர். இதில் இருந்து அடுத்த தலைமுறைக்கு பொதுவாழ்வில் ஈடுபட வேண்டும என்ற மிகப்பெரிய ஆர்வம் வந்துள்ளது.
சாராசரியாக 20 பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரை 76 பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பார்வையிட்டுள்ளனர் என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share