சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட் 12) முன்மொழிந்த, தொகுதி மறுவரையறைக்கு எதிரான அரசினர் தனித் தீர்மானம் திமுக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் தலைமையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சி எம்.பி-க்கள் கூட்டத்தில், தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இன்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜோசப் விஜய் தொகுதி மறுவரையறை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்தார்.
இந்தத் தீர்மானத்திற்கு திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.யூ.எம்.எல் (IUML), மனிதநேய ஜனநாயக கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
இதனைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் முதலமைச்சர் முன்மொழிந்த தனித் தீர்மானத்தின் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இறுதியில், தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகச் சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
இந்த தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
