தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 10ம் வகுப்பில் 94.31 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி அடைந்துளளனர்.
2025-26-ம் கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இன்று சென்னை கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
தமிழகத்தில் 12,467 பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 87.06 லட்சம் மாணவர்களில் 8,21,105 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
பொதுத்தேர்வில் 94.31 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ள நிலையில் வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகம். 96.47 சதவீதம் மாணவிகளும், 92.15 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in, results.digilocker.gov.in, www.tnresults.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
