சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மொத்தம் 75 நீதிபதிகள் இடங்கள் உள்ளன. 23 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தநிலையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் 19 நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமிக்க ஒன்றிய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ். அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் மற்றும்
வழக்கறிஞர்கள் நடராஜன் ரமேஷ், ஜி.கே. முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே. அப்பாதுரை, ஆர். அனிதா ஆகியோரும் நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 71ஆக அதிகரித்துள்ளது. 4 இடங்கள் காலியாக உள்ளன.
