இஞ்சி பூண்டு பேஸ்ட்டை நீண்டகாலம் சேமித்து வைப்பது எப்படி? – இதோ டிப்ஸ்!

Published On:

| By Santhosh Raj Saravanan

Tips for storing ginger garlic paste fresh for a long time

இஞ்சி பூண்டு விழுதை (Ginger Garlic Paste) நீண்ட காலத்திற்கு கெட்டுப்போகாமல் சேமித்து வைப்பது எப்படி என்பது குறித்துப் பார்க்கலாம்.

நமது இந்திய சமையலில் இஞ்சி பூண்டு விழுதுக்கு என ஒரு தனி இடம் உள்ளது. இது சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுவையை கூட்ட உதவுகிறது. குறிப்பாக குழம்புகள், பிரியாணி உள்ளிட்டவற்றில் இஞ்சி பூண்டு விழுதுக்கு (ginger garlic paste) பிரதான இடமுள்ளது. தினமும் நமது உணவில் இஞ்சி பூண்டு விழுது தேவைப்படுகிறது. ஆனால், தினமும் புதிதாக விழுது தயாரிப்பது அதிக நேரம் எடுக்கும் வேலை.

ADVERTISEMENT

ஆகவே, பலர் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒருமுறையோ இஞ்சி பூண்டு விழுது தயாரித்து அதனை குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்து பயன்படுத்துகிறார்கள். அதே சமயம் சில நாட்களுக்குப் பிறகு குளிர்சாதன பெட்டியில் (Refrigerator) வைத்துள்ள விழுது நிறம் மாறி, துர்நாற்றம் வீசத் தொடங்குவது பெரிய பிரச்சனையாக உள்ளது. சில எளிய முறைகளைப் பின்பற்றினால் இஞ்சி-பூண்டு விழுதை நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடனும் பாதுகாப்பாகவும் வைத்திருக்க முடியும்.

இஞ்சி பூண்டு விழுதை உடனே அரைக்க வேண்டாம்

இஞ்சி பூண்டு விழுது விரைவில் கெட்டுப்போவதற்கான முக்கிய காரணம் ஈரப்பதம்தான். இஞ்சியையும் பூண்டையும் (ginger garlic paste) கழுவிய பிறகு அவற்றை உடனடியாக அரைக்கக் கூடாது. முதலில், அவற்றை ஒரு உலர்ந்த துணியால் நன்றாகத் துடைத்து, அவை முற்றிலும் உலர்ந்துவிட்டன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீர்ச்சத்து குறைவாக இருந்தால் அது நீண்ட நாட்களுக்கு கெட்டுப்போகாது.

ADVERTISEMENT
எண்ணெய் மற்றும் உப்பு சேர்க்கலாம்

அதிக அளவில் இஞ்சி பூண்டு விழுது தயாரிக்கும்போது ​​ஒன்று முதல் ஒன்றரை மேசைக்கரண்டி சமையல் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்ப்பது சிறந்தது. உப்பும் எண்ணெயும் இஞ்சி பூண்டு விழுதின் (add oil and salt)  தரத்தைப் பராமரிக்க உதவுகின்றன. இவை நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கான வாய்ப்பைக் குறைத்து, விழுதை நீண்ட காலத்திற்குப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.

காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் சேமிக்கலாம்

இஞ்சி பூண்டு விழுதை பிளாஸ்டிக் டப்பாக்களுக்கு பதிலாக காற்றுப் புகாத கண்ணாடி பாட்டிலில் சேமிப்பது சிறந்தது. கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைப்பது உணவின் நறுமணத்தையும் தரத்தையும் (Storage tips) நீண்ட காலத்திற்குப் பாதுகாக்க உதவுகிறது. அத்துடன், ஒவ்வொரு முறையும்  கண்ணாடி பாட்டிலில் இருந்து விழுதை எடுக்கும்போது சுத்தமான மற்றும் உலர்ந்த கரண்டியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஈரமான கரண்டியைப் பயன்படுத்தினால், விழுது விரைவில் கெட்டுவிடும்.

ADVERTISEMENT
ஜிப் லாக்கரிலும் சேமிக்கலாம்

கண்ணாடி பாட்டில் இல்லையென்றால் இஞ்சி பூண்டு விழுதை காற்றுப் புகாத ஜிப் லாக்கர் பையில் சேமித்து வைக்க வேண்டும். இது காற்றும் ஈரப்பதமும் உள்ளே செல்வதற்கான (Food preservation) வாய்ப்பைக் குறைக்கும். ஜாடிகளைப் பயன்படுத்துபவர்கள் மூடியை வைப்பதற்கு முன் அதன் வாய்ப் பகுதியை பேப்பரால் மூடி, கூடுதல் பாதுகாப்பிற்காக மூடியை இறுக்கமாக மூடவும்.

ப்ரீசரில் சேமித்து வைக்கலாம்

நீங்கள் அதிக அளவில் இஞ்சி பூண்டு விழுது தயாரித்தால் அதைச் சிறிய பகுதிகளாகப் பிரித்து ஃபிரீசரில் சேமித்து வைக்கலாம். ப்ரீசரில் அதை ஒரு ஐஸ் க்யூபிலோ அல்லது சிறிய காற்றுப்புகாத கொள்கலனில் (stored in freezer) சேமித்து வைத்தால், தேவைப்படும்போது உங்களுக்குத் தேவையானதை மட்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதன்மூலம் மீதமுள்ள விழுது மீண்டும் மீண்டும் வெளிப்புற வெப்பநிலைக்கு ஆளாவதில்லை.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share