முகத்தில் உள்ள முடிகளை அகற்ற வேண்டுமா? – இந்த ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்தி பாருங்க!

Published On:

| By Santhosh Raj Saravanan

Homemade face mask to remove facial hair

முகத்தில் உள்ள மெல்லிய, லேசான முடிகளை அகற்ற கடலை மாவு + கோதுமை மாவு அடிப்படையிலான மாஸ்க்கை (Face Mask) முயற்சி செய்து பார்க்கலாம்.

முகத்தில் முடி இருப்பது என்பது முற்றிலும் இயற்கையானது. ஆனால், பல பெண்கள் மிருதுவான சருமத்திற்காகவும் அழகான தோற்றத்திற்காகவும் முகத்தில் உள்ள மெல்லிய முடிகளை (facial hair) அகற்ற விரும்புகிறார்கள். த்ரெடிங் மற்றும் வேக்ஸிங் போன்றவற்றை பெண்கள் அதற்காக  தேர்வு செய்கிறார்கள். ஆனால், அது விலை உயர்ந்ததாக இருக்கிறது. அத்துடன், அடிக்கடி அழகு நிலையங்களுக்குச் செல்வது எப்போதும் வசதியானதாக இருப்பதில்லை.  சிலர் முகத்தில் உள்ள முடியை அகற்ற மென்மையான, இயற்கையான மாற்று வழிகளையே விரும்புகிறார்கள்.

ADVERTISEMENT

உங்கள் முகத்தில் உள்ள மெல்லிய, லேசான முடிகளை அகற்ற வேக்ஸிங் (Waxing) அல்லது த்ரெடிங் செய்வதைத் தவிர்க்க விரும்பினால், வீட்டில் தயாரிக்கப்பட்ட இந்த மாவு அடிப்படையிலான மாஸ்க்கை முயற்சி செய்து பார்க்கலாம்.

வீட்டிலேயே ஃபேஸ் மாஸ்க் (Face mask) செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

ADVERTISEMENT
  • 2 தேக்கரண்டி கோதுமை மாவு
  • 2 தேக்கரண்டி கடலை மாவு
  • 1 தேக்கரண்டி சர்க்கரை
  • வெந்நீர்
செய்முறை

ஒரு வாணலியில் கோதுமை மாவு மற்றும் கடலை மாவை ஒன்றாகச் சேர்த்து குறைந்த தீயில் அவை லேசான பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும். இந்தக் கலவையை முழுமையாக ஆற விடுங்கள். மற்றொரு கிண்ணத்தில் சிறிதளவு வெதுவெதுப்பான நீரில் சர்க்கரையைக் கரைக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி வறுத்த கோதுமை + கடலை மாவுக் கலவையை (Flour Mask) சர்க்கரைக் கரைசலில் சேர்த்து, தடிமனான, தடவக்கூடிய பசை போல ஆகும் வரை நன்றாகக் கலக்க வேண்டும். இப்போது ஃபேஸ் மாஸ்க் ரெடி.

எப்படி பயன்படுத்துவது?

முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவிக்கொள்ளவும். தயாரிக்கப்பட்ட ஃபேஸ் மாஸ்க்கை (How To Apply Mask) முகத்தில் மெல்லிய முடிகள் உள்ள பகுதிகளில் சீராகப் பூசவும். அதனை முழுமையாக உலர விடவும். காய்ந்தவுடன், மெதுவாகத் தேய்த்து மாஸ்க்கை அகற்றவும். இப்படி மென்மையாக தேய்ப்பது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவுவதோடு, தொடர்ந்து பயன்படுத்தும்போது முகத்தில் உள்ள மெல்லிய முடிகளைப் படிப்படியாக பலவீனப்படுத்தவும் கூடும்.

ADVERTISEMENT
இதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

இந்த ஃபேஸ் மாஸ்க் முடியை ஒரேயடியாக வேரோடு பிடுங்குவதில்லை. மாறாக, இந்தக் கலவையானது ஒரு மென்மையான சரும உரித்தலை செய்கிறது. தொடர்ந்து பயன்படுத்தும்போது மெல்லிய முடிகளைப் படிப்படியாக பலவீனப்படுத்தி, அவற்றின் மறுவளர்ச்சியைக் குறைக்கிறது.  இது இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுவதால், உங்கள் சருமம் பொலிவாகவும் (Brighten the skin) மென்மையாகவும் தோற்றமளிக்கும். இருப்பினும், இந்தத் தீர்வு தடித்த அல்லது அடர்த்தியான முக முடிகளை அகற்ற வாய்ப்பில்லை.

Photo of author
Santhosh Raj Saravanan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share