பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளியான ‘தங்கலான்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸில் இழுபறி ஏற்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டில் மிகுந்த எதிர்பார்ப்புகள் மத்தியில் வெளியான திரைப்படங்களில் மிக முக்கியமான திரைப்படம் ‘தங்கலான்’. பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி திருவோத்து, பசுபதி எனப் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து பிரம்மாண்ட பொருட்செலவில் உருவான இந்த பீரியட் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கோலார் தங்க வயல் குறித்த உண்மை வரலாற்றை மாய எதார்த்தவாதத்துடன் சொன்ன இந்தத் திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகப் பல பாராட்டுகள் கிடைத்தது.
இந்தி ரிலீஸிலும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் தமிழில் வசூல் ரீதியாக மக்கள் மத்தியில் பெரிய அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில், தற்போது ‘தங்கலான்’ படத்தயாரிப்பு நிறுவனத்திற்கும் அதன் ஓடிடி வெளியீட்டாளரான நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்திற்கும் இழுபறி நீடித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
படம் பெருமளவு மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறாததால் ஓடிடி விற்பனையில் பேரம் பேசி வருவதாகத் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த பேச்சு வார்த்தைகள் விரைவில் நடந்து முடிந்தால் ‘தங்கலான்’ திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கலாம் .
இதற்கிடையில் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகத் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
– ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ‘இந்தியன் – 3’?
சென்னையில் இந்திய விமானப்படை தின சாகச நிகழ்ச்சி… எப்படி பார்ப்பது ?
Comments are closed.