நடிகர் விஜயின் கடைசி படத்தை வெற்றிமாறன் இயக்கப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன. அதோடு ஹெச்.வினோத்தும் இந்த பந்தயத்தில் இருப்பதாக கூறப்பட்டது.
இயக்குநர் ஹெச்.வினோத் சமீபத்தில் விஜயை சந்தித்ததால், அவர் ‘தளபதி 69’ படத்திற்கு கதை எழுதுவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் அவர் விஜயை சந்தித்தது வேறு ஒரு விஷயத்திற்காக என்று, தற்போது உறுதியான தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதேபோல ‘விடுதலை 2’, ‘வாடிவாசல்’ என வெற்றிமாறனும் பயங்கர பிஸியாக இருக்கிறார் என்பதால், அவரும் விஜயை இயக்குவதற்கான வாய்ப்பும் குறைவாகவே உள்ளது.

இந்த நிலையில் தளபதி விஜயின் கடைசி படத்தை இயக்கப்போவது யார்? என்னும் கேள்விக்கான விடை தற்போது வெளியாகி இருக்கிறது.
அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் விஜயை இயக்கப்போவது கார்த்திக் சுப்புராஜ் தானாம். தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை கையாண்டு வரும் கார்த்திக், விஜயின் கடைசி படத்தை மாஸ்+கிளாஸ் என்ற வகையில் எடுக்கத் திட்டமிட்டு இருக்கிறாராம்.
படத்திற்கான பட்ஜெட் அதிகம் என்பதால் தான், தெலுங்கு நிறுவனமான டிவிவி பக்கம் கார்த்திக் சுப்புராஜின் கவனம் திரும்பி இருக்கிறதாம்.
விரைவில் ‘தளபதி 69’ படத்தின் இயக்குநர் யார் என்பது குறித்து, டிவிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கதவை சாத்தி பூட்டு போட்டுவிட்டோம்: அமித் ஷாவுக்கு ஜெயக்குமார் பதில்!
சாய் கிஷோருக்கு அடித்த ஜாக்பாட்: TNPL ஏல வரலாற்றில் இதுவே முதல்முறை!
