பருவமழை: மருத்துவக் கட்டமைப்புகள் தயாராக இருக்க உத்தரவு!

Published On:

| By christopher

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவக் கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறிப்பாக, குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்தல், கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து உறுதி செய்தல்,  மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதி இருப்பதை உறுதி செய்தல், காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்புதல்…

ADVERTISEMENT

மேலும், புயல் மற்றும் கனமழைக்கு முன்பே விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைத்தல், பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவை தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

ராஜ்

ADVERTISEMENT

ரூ.79.28 கோடியில் 1,500 பழங்குடியினர் குடும்பங்களுக்கு வீடுகள்!

கிக் : விமர்சனம்

ADVERTISEMENT

 

Photo of author
christopher
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share