புரோ கபடி: முதல் இடத்தை பிடித்து தமிழ் தலைவாஸ் அசத்தல்!

Published On:

| By Kumaresan M

2024 புரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது.

புரோ லீக் கபடி தொடரில் கடந்த ஆண்டு பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறிய தமிழ் தலைவாஸ் அணி, இந்த முறை ஐந்து போட்டிகளின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அனி  மூன்று வெற்றிகள், ஒரு தோல்வி மற்றும் ஒரு டை செய்து உள்ளது. இதன் மூலம் 19 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

நடப்பு சாம்பியன் புனேரி பல்தான் அணி 19 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. தமிழ் தலைவாஸ் அணிக்கு  37 புள்ளிகள் ஸ்கோர் வித்தியாசமாக உள்ளது. புனேரி பல்தான் 34 ஸ்கோர் வித்தியாசம் பெற்றுள்ளது.

புனேரி பல்தான் சிறந்த அணியாக இருக்கும் நிலையில் அந்த அணியை பின்னுக்கு தள்ளி  தமிழ் தலைவாஸ் அணி முதல் இடத்தை பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் மூலம் 12 அணிகள் ஆடும் இந்த தொடரில்   புள்ளிப் பட்டியலில் முதல் ஆறு இடங்களுக்குள் தமிழ் தலைவாஸ் இடம் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு  முன்னேறும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இப்போது,  தமிழ் தலைவாஸ் அணி ரெய்டுகளில் மட்டுமில்லாமல், தடுப்பாட்டத்திலும் சிறந்து விளங்குகிறது.

தமிழ் தலைவாஸ் அணி அடுத்து நவம்பர் 4 ஆம் தேதி பெங்களூரு புல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது. இனி வரும் ஆட்டங்களில்  தமிழ் தலைவாஸ் அணி வெற்றிகளை குவிக்கும் என்ற ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

மருமகன் இருக்க பயம் ஏன்? முதன்முறையாக அறிமுகமான பிரியங்கா மகன்!

இந்து கோவிலுக்குள் எப்படி செல்லலாம்… ஃபகத் பாசில் செய்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share