கேரளாவில் பல இந்து கோவில்களில் இந்துக்கள் அல்லாதோர் அனுமதிக்கப்படுவதில்லை. அந்த வகையில், திருவனந்தபுரம் அருகேயுள்ள திருப்பனித்துரா ஸ்ரீ பூர்ணத்ரேஷயா கோவிலுக்குள்ளும் இந்துக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில், மலையாள பட இசையமைப்பாளர் சுஷின் ஷியாமின் திருமண நிகழ்வில் நடிகர் பகத் ஃபாசில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருப்பனித்துரா ஸ்ரீ பூர்ணத்ரேஷயா கோவிலில் நடந்த இந்த திருமணத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடிகை நஷ்ரியா நஸிம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கு வழக்கறிஞரும் வலதுசாரி சிந்தனையாளருமான கிருஷ்ணராஜ் என்பவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், ‘இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் செல்வது தவறானது. தண்டனைக்குரியது. இப்போதெல்லாம் பெரும்பாலான கோவில் நிர்வாகங்கள், பிற மத மக்கள் கோவிலுக்குள் நுழைவதை தடுக்க முன் வருவதில்லை. இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைவது இந்துக்களின் நம்பிக்கையையும் கோவிலின் பாராம்பரியத்தையும் குலைக்கும் செயல் ஆகும்’ என்று கூறியுள்ளார்.
எனினும் வழக்கறிஞர் கிருஷ்ணராஜின் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ‘திருமண நிகழ்வில் பல மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது இயல்பானதுதான். அன்றைய தினத்தில் ஏராளமான கிறிஸ்தவ , முஸ்லிம் குழந்தைகளும் கூட பங்கேற்றனர். இதில், என்ன தவறு இருக்கிறது? இந்துக்களை மட்டும்தான் திருமணத்துக்கு அழைக்க வேண்டுமா? வழக்கறிஞர் கிருஷ்ணராஜ் பித்து பிடித்தவர் போல நடக்க வேண்டாம்’ என்றும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
மேலும் குறைந்த தங்கம் விலை… மகிழ்ச்சியில் மக்கள்!
நடிகர் அஜித் பெயரில் ரேசிங் வெப்சைட் : போலியா? உண்மையா?
இந்து அல்லாதார், இந்துக் கோவிலுக்குள் வரக்கூடாது, இந்துக்களா இருந்தாலும் எல்லாரும் கோவில் கருவறைக்குள் வ்ரக்கூடாது. ஆனா தட்டுல காசு மட்டும் யாரா இருந்தாலும் போடலாம். அது பிச்சை அல்ல- தட்சணையாம்.