காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுக்கான அறிவிப்புகள் – முதல்வர் விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கையை முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (செப்டம்பர் 3) தாக்கல் செய்தார்.

காவல் துறைக்கான அறிவிப்புகளின் விபரங்கள்

  1. மாநிலத்திலுள்ள காவல் நிலையங்களில் 29,108 கூடுதல் காவலர் பணியிடங்கள் படிப்படியாக அடுத்த ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும். தமிழ்நாடு காவல் படையில் இவ்வாண்டு 5,000 பெண் காவலர்கள் உட்பட மொத்தம் 10,000 காவலர்கள் நியமிக்கப்படுவர்.
  2. போதைப்பொருள் பயன்பாட்டை வெற்றிகரமாக ஒழிக்கும் கிராமம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும்.
  3. ரூ.212 கோடி ஒதுக்கீட்டில் காவல்துறை நவீனமயமாக்கப்படும். செயற்கை நுண்ணறிவு, நவீன டிஜிட்டல் தடயவியல், நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  4. லஞ்சம், லாவண்யமன்ற அரசு அலுவலகங்களை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் சிறப்புப் பிரிவுகளுக்கும் அனுமதித்திருந்த சில்லறை செலவினம் (Contingency Fund) உயர்த்தி வழங்கப்படும்.
  5. பணியின் போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவல் துறையினரின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ.1 கோடி வழங்கப்படும்.
  6. பணிக்காலத்தில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை (Ex-gratia payment) ரூ.20 லட்சம் ரூபாயிலிருந்து ரூ.30 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  7. வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு போலீஸ் அகாடமியில் பன்னோக்கு உள் விளையாட்டு அரங்கம் மற்றும் வெளிப்புற விளையாட்டு வசதிகள் சுமார் ரூ.23 கோடி செலவில் அமைக்கப்படும்.
  8. சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வுப் பிரிவுகள் (DNA Testing Facility) சுமார் ரூ.14 கோடி செலவில் நிறுவப்படும்.
  9. காவல்துறையின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக புதிய வாகனங்கள் ரூ.200 கோடி செலவில் வாங்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அறிவிப்பு விபரங்கள்:

  1. ஆறு இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் சுமார் ரூ.16 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும்.
  2. 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் ரூபாய் சுமார் ரூ.80 கோடி செலவில் கட்டப்படும்.
  3. Fire and Rescue Service Training Academy-ன் இரண்டாம் கட்டப்பணிகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share