பித்தளை மோதிரம் செஞ்சா கூட 1 பைசாவுக்கு மேல ஆகுமேடா : அப்டேட் குமாரு

Published On:

| By Kavi

இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்

ADVERTISEMENT

59 திமுக எம்எல்ஏக்களுக்கு கார் வேண்டாம் – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்
 எங்க மைக்கை அந்த 59 பேர்கிட்டயும் கொடுத்து சொல்ல சொல்லுங்க பார்க்கலாம்…

Mannar & company

ADVERTISEMENT

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எல்லாத்தையும் நேரலையில் காட்டுறோம்..
சட்டப்பேரவையில் மட்டும் எல்லாத்தையும் அவை குறிப்பில் இருந்து நீக்குறோம்!

Sasikumar J

ADVERTISEMENT

காலையிலேயே முதல் சிக்னல்ல மாட்டிட்டீங்கனா…
அன்னைக்கு நாள் முழுக்க எல்லா சிக்னலும் உங்களைப் பார்த்து,
“இன்னும் வரலையா?”ன்னு காத்துக்கிட்டே இருக்கும்…!

அண்ணாச்சி

59 திமுக எம்எல்ஏக்களுக்கு
கார் வேண்டாம் -..!!
-வடை… போச்சே…!!!

படிக்காதவன்

அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதை ரீல்ஸாக வெளியிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்
-அவைகுறிப்பில் இருந்து இது நீக்கப்படுகிறது…

Writer SJB

பணம் மனிதனை மாற்றுவதில்லை
பணம் வந்த பிறகு தான் அந்த மனிதனின் உண்மையான முகம் வெளிவருகிறது..!

ArulrajArun

கிடைக்கிற gap-ல எல்லாம் நாம முன்னேறி செல்வது traffic jam ல மட்டும் தான் – happy weekend

Mannar & company

வாழ்க்கையில் சில விஷயங்கள்
ஜோசியக்காரன் சொல்லித்தான் தெரியணும்னு இல்லை…
கதவை சத்தமா மூடுற சத்தமே போதும்..
“இன்னைக்கு ராசி சரியில்லை”ன்னு தெரிஞ்சிடும்!

balebalu

பித்தளை மோதிரம்
செஞ்சா கூட
1 பைசா க்கு
மேல ஆகுமேடா

லாக் ஆஃப்

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share