மக்களே உஷார்! அக்.15-18 வரை கனமழை ’சம்பவம்’ செய்யப் போகுது.. 21 மாவட்டங்கள் லிஸ்ட்- முழு விவரம்!

Published On:

| By Mathi

Weather-Rain- Alert

தமிழகத்தில் அக்டோபர் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 12) பிற்பகல் வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் அக்டோபர் 13-ந் தேதி குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

சென்னை, புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் மழை

அத்துடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும்.

நாளை (அக்டோபர் 13-ந் தேதி), சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அக்.15 முதல் அக்.18 வரை ‘கனமழை சம்பவம்’

மேலும் தமிழகத்தில் அக்டோபர் 15 முதல் 18-ந் தேதி வரை எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்ற விவரத்தையும் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 15

  • கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள்
  • நீலகிரி
  • ஈரோடு
  • சேலம்
  • தேனி
  • கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 16

  • நீலகிரி
  • கோவை
  • ஈரோடு
  • திருப்பூர்
  • சேலம்
  • தர்மபுரி
  • திருச்சி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • மதுரை
  • திண்டுக்கல்
  • கடலூர்
  • கள்ளக்குறிச்சி
  • நாமக்கல்
  • கரூர்
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை
  • சிவகங்கை ஆகிய 21 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 17

  • நீலகிரி
  • கோவை
  • ஈரோடு
  • திருப்பூர்
  • சேலம்
  • கரூர்
  • திருச்சி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • நாமக்கல்
  • திருவண்ணாமலை
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • கடலூர்
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை
  • திண்டுக்கல்
  • தேனி ஆகிய 21 மாவட்டங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அக்டோபர் 18

  • நீலகிரி
  • கோவை
  • ஈரோடு
  • திருப்பூர்
  • சேலம்
  • கள்ளக்குறிச்சி
  • திருவண்ணாமலை
  • கரூர்
  • திருச்சி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • தஞ்சாவூர்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • நாகப்பட்டினம்
  • புதுக்கோட்டை
  • திண்டுக்கல்
  • தேனி ஆகிய 18 மாவட்டங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இந்த நாட்களில் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வானிலை அறிக்கை முழு விவரம்

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share