சவுதி அரேபியா விமான நிலையம் மீது தாக்குதல்: இந்தியர் உட்பட 13 பேர் பலி.. 300-க்கும் மேற்பட்டோர் காயம்!

Published On:

| By Mathi

Saudi Airport- Attack_

சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது அக்டோபர் 10-ந் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் (Riyadh) இந்தியர் ஒருவர் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்தத் தாக்குதலுக்கு ஏமனின் ஹவுதி தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஏமனில் ஹவுதி தீவிரவாத அமைப்பினருக்கும் சவுதி அரேபியா ஆதரவு பெற்ற அரசுப் படைகளுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் நடைபெற்று வருகிறது. ஈரானின் ஆதரவு பெற்ற ஹவுதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது சவுதி ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்துவதற்குப் பதிலடியாக, சவுதி அரேபியாவின் விமான நிலையங்களை ஹவுதிகள் குறிவைத்து தாக்கி வருகின்றனர்.

ADVERTISEMENT

ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தில் அக்டோபர் 10-ந் தேதி வழக்கம்போல விமானப் போக்குவரத்து நடைபெற்று வந்தது. அப்போது மெக்காவுக்கு செல்ல வந்த பயணிகள், தங்களது விமானங்களில் ஏறுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் விமான நிலையம் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ காட்சிகளை அல் அரேபியா செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், மெக்காவுக்கு செல்லும் பயணிகள் விமானங்களில் ஏறுவதற்குத் தயாராகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்தியர் ஒருவர் பலி

ஹவுதி அமைப்பின் இத்தாக்குதலில் இந்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். 10 இந்தியர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தற்போதைய தகவல்களின்படி, உயிரிழந்த இந்தியர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த முகமது யூசுப் அலி என தெரிய வந்துள்ளது. மெக்கா பயணத்துக்காக சென்றிருந்தபோது ஹவுதிகளின் இந்த தாக்குதலில் சிக்கி முகமது யூசுப் அலி உயிரிழந்துள்ளார். அவரது 2 மகன்களும் படுகாயமடைந்துள்ளனர்.

ADVERTISEMENT

இதே ரியாத் விமான நிலையம் மீது நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்; 11 பேர் காயமடைந்தனர்.

மத்திய அரசு கண்டனம்

ரியாத் விமான நிலையம் மீதான ஹவுதிகளின் தொடர் தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share