VIDEO: சென்னை விமானத்தில் நடுவானில் பவர் பேங்க் வெடித்து தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்!

Published On:

| By Mathi

Chennai Flight-Fire Accident

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் பவர் பேங்க் வெடித்து தீப்பிடித்ததால் அந்த விமானம் ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்டது.

டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்று (அக்டோபர் 11-ந் தேதி) இண்டிகோ நிறுவனத்தின் 6E6115 விமானம் இயக்கப்பட்டது. ஏர்பஸ் A321neo ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் பிற்பகல் 1.10 மணிக்குப் புறப்பட்டு மாலை 4 மணிக்குச் சென்னையில் தரையிறங்கத் திட்டமிடப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த விமான பயணத்தின்போது நடுவானில் பயணி ஒருவரின் பவர் பேங்க் திடீரென வெடித்து தீ பிடித்தது. இதனையடுத்து பயணிகள் தீயை அணைக்க முயற்சித்தனர். விமானப் பணியாளர்கள் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்தித் தீயைக் கட்டுப்படுத்தினர்.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் ஹைதராபாத் விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share