பிரபல பின்னணிப் பாடகி எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ‘கற்பூர நாயகியே கனகவல்லி…’ என்ற தமிழ் பக்திப் பாடலுடன் பிரதமர் நரேந்திர மோடி நவராத்திரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நவராத்திரி பண்டிகையின் தொடக்கத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: நவராத்திரி திருவிழா தொடங்கும் இந்த நன்னாளில், அமைதிக்கு அதிபதியான அன்னை சைலபுத்ரியின் திருவடிகளில் கோடானுகோடி வணக்கங்களைச் செலுத்துகிறேன்.
அன்னையின் தெய்வீக அருள் அனைவரது உள்ளங்களிலும் பொறுமை மற்றும் தன்னம்பிக்கை என்னும் விளக்கை ஏற்றட்டும்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் அன்னையின் ஆசீர்வாதம் என்றென்றும் கிடைக்க வேண்டும் என்பதே எனது மனமார்ந்த விருப்பம். இவ்வாறு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரபலமான எல்.ஆர். ஈஸ்வரி பாடிய ‘கற்பூர நாயகியே கனகவல்லி…’ என்ற அம்மன் பக்திப் பாடலின் யூடியூப் லிங்கை ஷேர் செய்து பிரதமர் மோடி நவராத்திரி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
