குழந்தைகள் தின ஸ்பெஷல்: ரூ.9.27 கோடியில் தமிழக அரசு புதிய அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

நாட்டில் ஆண்டுதோறும் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையிலாக புதிய அரசு பதவியேற்ற பிறகு வரும் முதல் குழந்தைகள் தினம் இதுவாகும். இந்த நாளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு வழங்குவது குறித்து தமிழக முதல்வர் விஜய் ஆலோசனை செய்து வருகிறார்.

ADVERTISEMENT

இதன் அடிப்படையில், தமிழகத்தில் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் குழந்தைகள் தினத்தன்று மாணவர்களுக்கு 45 கிராம் எடையில், Mixed Fruit , Classic Vanilla, சாக்லேட் ஆகிய சுவைகளில் கேக்குகள் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகளை வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டு, விரைவில் டெண்டர் கோரப்பட உள்ளது.

இந்தத் திட்டத்திற்காக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கேக்குகள் வாங்கும் போது மொத்த காலாவதி காலத்தில் குறைந்தது 30 நாட்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share