ஜெயிலில் மனைவி.. இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு திடீர் மாரடைப்பு!

Published On:

| By Mathi

Mahinda Rajapaksa-Heart Attack

இலங்கை முன்னாள் அதிபரான மகிந்த ராஜபக்சேவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இலங்கையின் முன்னாள் அதிபரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மூத்த தலைவருமான மகிந்த ராஜபக்சே, 2005-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை அந்நாட்டின் அதிபராகப் பதவி வகித்தார். பின்னர் இலங்கையின் பிரதமராகவும் பதவி வகித்தார். மகிந்த ராஜபக்சேவின் பதவிக் காலத்தில்தான் 2009-ம் ஆண்டு ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் அழித்து ஒழிக்கப்பட்டது. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

2022-ம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கும் மகிந்த ராஜபக்சேவின் உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஜெயிலில் மகிந்த ராஜபக்சே மனைவி

கடந்த அக்டோபர் 7-ந் தேதியன்று ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் மகிந்த ராஜபக்சேவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

ADVERTISEMENT

மகிந்த ராஜ்பக்சேவுக்கு திடீர் மாரடைப்பு

இந்நிலையில், இன்று (அக்டோபர் 12) காலை கொழும்பின் கிருலப்பனை பகுதியில் உள்ள வீட்டில் இருந்த மகிந்த ராஜபக்சேவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கொழும்பில் உள்ள நவலோகா தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share