VIDEO: மின்வெட்டு- சென்னை தலைமை செயலகத்தில் இருளில் மூழ்கிய ‘அமைச்சர்கள் அறைகள்’- வைரலாகும் வீடியோ

Published On:

| By Mathi

Chennai Secretariat- Power Cut

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று அக்டோபர் 12-ந் தேதி ஏற்பட்ட திடீர் மின்வெட்டால் அமைச்சர்கள் அறைகள் இருளில் மூழ்கிக் கிடந்தன. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. பல இடங்களில் மின்வெட்டு பிரச்சனைக்கு தீர்வு காண கோரி ஆளும் தவெக அரசுக்கு எதிராக பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும் கூட மின்வெட்டு ஏற்படுவது இயல்பான ஒன்றாகிவிட்டது.

ADVERTISEMENT

இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தையும் மின்வெட்டு இன்று பதம் பார்த்துவிட்டது. தலைமை செயலகத்தில் இன்று காலை திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.

இதனால் அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், விக்னேஷ், வெங்கடராமன், ரஞ்சித் உள்ளிட்டோரது அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share