ஆயுத பூஜைக்கு திண்டுக்கல், மதுரை போறீங்களா? தாம்பரம்- மானாமதுரை இடையே இன்று முதல் 4 சிறப்பு MEMU ரயில்கள்!

Published On:

| By Mathi

Tambaram-Manamadurai MEMU Train

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக தாம்பரம்- மானாமதுரை இடையே 4 சிறப்பு MEMU ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இன்று மாலை 5.30 மணிக்கு..

தாம்பரத்தில் இருந்து இன்று (அக்டோபர் 16) மாலை 5.30 மணிக்குப் புறப்படும் 06161 சிறப்பு MEMU ரயில், நாளை (அக்டோபர் 17) அதிகாலை 3 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

ADVERTISEMENT

இந்த ரயில்,

  • செங்கல்பட்டு
  • மேல்மருவத்தூர்
  • விழுப்புரம்
  • விருத்தாசலம்
  • அரியலூர்
  • ஸ்ரீரங்கம்
  • திருச்சி
  • மணப்பாறை
  • திண்டுக்கல்
  • சோழவந்தான்
  • மதுரை
  • திருப்புவனம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மானாமதுரையில் இருந்து நாளை காலை 10.45 மணிக்கு..

மறுமார்க்கத்தில் நாளை (அக்டோபர் 17) காலை 10.45 மணிக்கு மானாமதுரையில் இருந்து புறப்படும் 06162 சிறப்பு MEMU ரயில், நாளை இரவு 8.30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

ADVERTISEMENT

இந்த ரயில் திருப்புவனம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

நாளை இரவு 11.55 மணிக்கு..

இதேபோல நாளை (அக்டோபர் 17) இரவு 11.55 மணிக்குத் தாம்பரத்தில் இருந்து புறப்படும் 06159 சிறப்பு MEMU ரயில், நாளைமறுநாள் (அக்டோபர் 18) காலை 11 மணிக்கு மானாமதுரை சென்றடையும்.

ADVERTISEMENT

இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, திருப்புவனம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

திருச்சியில் காலை 7.25 மணிக்கும், திண்டுக்கல்லில் காலை 8.30 மணிக்கும், மதுரையில் காலை 9.40 மணிக்கும் இந்த ரயில் புறப்படும்.

அக்டோபர் 20-ல் சென்னை திரும்ப..

ஆயுத பூஜை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளுக்காக அக்டோபர் 20-ந் தேதி செவ்வாய்க்கிழமை மற்றொரு சிறப்பு MEMU ரயில் இயக்கப்படுகிறது.

மானாமதுரையில் இருந்து மதியம் 2.45 மணிக்குப் புறப்படும் 06160 சிறப்பு MEMU ரயில், அதே நாளில் இரவு 11.45 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் திருப்புவனம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

மதுரையில் மாலை 4 மணிக்கும், திண்டுக்கல்லில் மாலை 5 மணிக்கும், திருச்சியில் மாலை 6.30 மணிக்கும் இந்த ரயில் புறப்படும்.

இந்த 4 சிறப்பு MEMU ரயில்களும் தலா 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. MEMU ரயில்களில் பொதுவாகக் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என்பதால், ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. உரிய பயணச்சீட்டு வாங்கிப் பயணம் செய்யலாம்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share