ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து திருச்சிக்கும் திருச்சியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு MEMU ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இன்று இரவு 7 மணிக்கு..
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (அக்டோபர் 16) இரவு 7 மணிக்குப் புறப்படும் 06191 சிறப்பு MEMU ரயில், நாளை (அக்டோபர் 17) அதிகாலை 4.05 மணிக்குத் திருச்சி சென்றடையும்.
இந்த ரயில்
- தாம்பரம்
- செங்கல்பட்டு
- மேல்மருவத்தூர்
- விழுப்புரம்
- பண்ருட்டி
- திருப்பாதிரிப்புலியூர்
- பரங்கிப்பேட்டை
- சிதம்பரம்
- சீர்காழி
- வைத்தீஸ்வரன்கோவில்
- மயிலாடுதுறை
- கும்பகோணம்
- பாபநாசம்
- தஞ்சாவூர்
- திருவெறும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


நாளை அதிகாலையில் திருச்சியில் இருந்து சென்னைக்கு…
மறுமார்க்கத்தில் நாளை (அக்டோபர் 17) அதிகாலை 5.50 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்படும் 06192 சிறப்பு MEMU ரயில், அதே மார்க்கத்தில் முற்பகல் 11.45 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.


சென்னையில் இருந்து திருச்சிக்கு நாளை இரவு 7 மணிக்கு..
இதேபோல நாளை அக்டோபர் 17-ந் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் 06193 சிறப்பு MEMU ரயில், நாளைமறுநாள் அக்டோபர் 18-ந் தேதி அதிகாலை 4.45 மணிக்குத் திருச்சி சென்றடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூர், பரங்கிப்பேட்டை, சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருவெறும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
அக்.20-ல் திருச்சியில் இருந்து சென்னைக்கு
மறுமார்க்கத்தில் அக்டோபர் 20-ந் தேதி செவ்வாய்க்கிழமை இரவு 10.45 மணிக்குத் திருச்சியில் இருந்து புறப்படும் 06194 சிறப்பு MEMU ரயில், மறுநாள் அக்டோபர் 21-ந் தேதி காலை 6.50 மணிக்குச் சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் திருவெறும்பூர், தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், சீர்காழி, சிதம்பரம், பரங்கிப்பேட்டை, திருப்பாதிரிப்புலியூர், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த 4 சிறப்பு MEMU ரயில்களும் தலா 12 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. MEMU ரயில்களில் பொதுவாகக் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய முடியும் என்பதால், ஆயுத பூஜைக்கு சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு இந்தச் சிறப்பு ரயில்கள் பயனுள்ளதாக இருக்கும். முன்பதிவு செய்ய வேண்டியதில்லை. உரிய பயணச்சீட்டு வாங்கிப் பயணம் செய்யலாம்.
