தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பாலச்சந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஆவடி மாநகராட்சி ஆணையரான சரண்யா மறு உத்தரவு வரும் வரை தாம்பரம் மாநகராட்சி ஆணையர் பதவியின் முழு கூடுதல் பொறுப்பை வகிப்பார் என்று தலைமை செயலாளர் சாய்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகராட்சியில் சுமார் ரூ.45 லட்சம் மதிப்பிலான இரண்டு டெண்டர்களில் விதிகளை மீறி, முன்கூட்டியே பணிகளை முடித்துவிட்டு, அதன் பின்னர் டெண்டர் நடைமுறைகளைத் திட்டமிட்டு முறைகேடாக இறுதி செய்ததாக ஆணையர் பாலசந்தர் மற்றும் சில அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தது.
இந்த நிலையில் பாலச்சந்தர் ஐஏஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
