விஜய் உருவ விநாயகர் சிலை சர்ச்சை: தவெகவினரைக் கைது செய்ய பாஜக வலியுறுத்தல்

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் தமிழக முதல்வர் விஜய் உருவத்தில் விநாயகர் சிலை வைத்துள்ளது கடும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயல் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பதிவில், “விநாயகர் சிலையை அவமதித்த தவெகவினரைக் கைது செய்க!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானை முதல்வர் விஜய் தோற்றத்தில் வடிவமைத்துக் காட்சிப்படுத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கோடிக்கணக்கான மக்களின் பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரிய இறை உருவத்தை, தனிநபர் துதிபாடுவதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் இவ்வாறு உருமாற்றுவது மக்களின் ஆன்மிக உணர்வுகளைக் கொச்சைப்படுத்தும் செயலாகும்.

ADVERTISEMENT

புனிதமான விழாவை அரசியல் சுயலாப மேடையாக்கி, இறை வழிபாட்டைத் தேர்தல் பிரச்சாரமாகத் தரம் தாழ்த்தும் தவெகவினரை முதல்வர் ஜோசப் விஜய் அவர்கள் ஆரம்பத்திலேயே கண்டிக்காமல் மௌனம் காத்ததே இத்தகைய எல்லை மீறிய செயல்கள் தொடர்வதற்குக் காரணமாகும்.

எனவே, மக்களின் மத உணர்வுகளையும் வழிபாட்டு மரபுகளையும் சீர்குலைக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள இத்தகைய சிலைகளை தவெக அரசு உடனடியாக அகற்ற வேண்டும். இறை உருவங்களைத் தங்களின் சுய விளம்பரங்களுக்குப் பயன்படுத்திய தவெக நிர்வாகிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து அவர்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share