மு.க.ஸ்டாலின் எப்படி இருக்கிறார்? நலம் விசாரித்த பெ.சண்முகம்

Published On:

| By Kavi

முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (செப்டம்பர் 15) மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் முப்பெரும் விழா நடைபெறவிருந்தது. ஆனால் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதால் முப்பெரும் விழா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்தநிலையில் முன்னாள் முதல்வரை தொடர்பு கொண்டு பல்வேறு தரப்பினரும் நலம் விசாரித்து வருகின்றனர்.

சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகமும் ஸ்டாலினின் உதவியாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

ADVERTISEMENT

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”திராவிட முன்னேற்றக் கழக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.

அவருடைய நேர்முக உதவியாளர் தினேஷை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன்.

ADVERTISEMENT

இல்லத்திலேயே சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share