ADVERTISEMENT

தமன்னாவின் முதல் மலையாள படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published On:

| By Monisha

Tamanna first malayalam movie

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல ஹிட் படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

சமீபத்தில் வெளியான நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்த தமன்னாவிற்கு மீண்டும் தமிழ் படங்களில் அதிக வாய்ப்பு கிடைக்க தொடங்கியுள்ளது. சுந்தர்.C இயக்கத்தில் தமன்னா நடிப்பில் அரண்மனை 4 படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகை தமன்னாவின் முதல் மலையாள படமும் திரைக்கு வர உள்ளது.

இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தாலும் இப்போது தான் முதன்முறையாக மலையாள படத்தில் கதாநாயகியாக தமன்னா நடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

பிரபல மலையாள நடிகர் திலீப்க்கு ஜோடியாக நடிகை தமன்னா ‘பந்தரா’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

 movie bandra release date

ADVERTISEMENT

நடிகர் திலீப்பின் சினிமா வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று அனைவரும் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் ராம்லீலா என்ற படம் மூலம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர் அருண் கோபி தான் தற்போது பந்தரா படத்தையும் இயக்கி உள்ளார்.

ராம்லீலா படத்தின் மூலம் நடந்த மேஜிக் மீண்டும் பந்தரா படத்தின் மூலமாகவும் நடக்கும் என்று ரசிகர் எதிர்பார்க்கின்றனர்.

இந்த படம் வரும் நவம்பர் 10ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காவாலா படத்தின் மூலம் கேரள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தமன்னா கதாநாயகியாகவும் கேரள ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பாரா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ச் ஆப் சேனலில் இணையுங்கள்…

– கார்த்திக் ராஜா

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து: 3 பேர் கைது!

காசா மருத்துவமனை மீது ஏவுகணை தாக்குதல்: மறுக்கும் இஸ்ரேல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share