சருமம் பளபளக்க நடிகை ஆலியா பட் கூறும் சூப்பர் டிப்ஸ் இதோ..

Published On:

| By Minnambalam Desk

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டை எல்லோருக்கும் பிடிக்கக் காரணம், அவரின் வசீகரமான தோற்றம். ஆலியா பட் அனைவராலும் ரசிக்கப்படக் காரணம் அவருடைய நடிப்பு மட்டுமல்ல, அவருடைய ஃபிட்னஸ் மற்றும் ஆரோக்கியமான சருமமும் கூட. தன்னுடைய சருமம் ஆரோக்கியமாக இருக்க அவர் பின்பற்றும் எட்டு வழிமுறைகளை பார்க்கலாம். ஆலியா பட் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்யூப் தன் அழகின் ரகசியம் பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

மசாஜ் செய்யுங்கள்

ADVERTISEMENT

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக இரவில் முகத்தில் படிந்த எண்ணெய், வியர்வை மற்றும் அழுக்குகளைப் போக்க கிளென்சரை (ஃபேஸ் வாஷ் அல்ல) பயன்படுத்துங்கள். சருமத்தை சுத்தப்படுத்த நுரை இல்லாத, லேசான கிளென்சரை பயன்படுத்துங்கள். பின்னர் சருமத்தை ஈரப்பதமாக்கிய பிறகு முகத்தை டோன் ஸ்கின் செய்யும் மசாஜரை பயன்படுத்தி நன்றாக மசாஜ் செய்யுங்கள்.

டோனிங் மிஸ்ட்

ADVERTISEMENT

முகத்தை சுத்தப்படுத்திய பிறகு ஆலியா பட் ஒரு டோனிங் மிஸ்டை பயன்படுத்துகிறார். ஆனால் அது கடுமையான, ஆல்கஹால் சார்ந்த டோனிங் மிஸ்ட் இல்லை. ஆலியா தனது சருமம் நாள் முழுவதும் வறண்டுவிடாமல் இருக்கவும் ஈரப்பதமாக வைத்திருக்கவும் இதையே செய்கிறார்.

கண்களுக்கு கீழ் கிரீம்

ADVERTISEMENT

காலையில் எழுந்தவுடன் இதையும் செய்யுங்கள். கண்களுக்குக் கீழே கிரீம்களைப் பயன்படுத்துவது கண்களைச் சுற்றியுள்ள வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. ஒரு நல்ல கிரீம் பயன்படுத்துவது கண்களுக்குக் கீழே கருவளையங்களையும் வறட்சியையும் குறைக்கும் என்று கூறுகிறார் ஆலியா பட்.

நியாசினமைடு

அலியா நியாசினமைடு-ஐ பயன்படுத்தி தனது தோள் சருமத்தை பராமரிக்கிறார். நியாசினமைடு சருமத்தில் உள்ள சுருக்கங்களை அகற்ற உதவுகிறது. அழுக்கு மற்றும் மாசுபாட்டிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது, உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்குகிறது மற்றும் சரும இறந்த செல்களை அகற்றி மீண்டும் புது செல்கள் உருவாக்க உதவுகிறது.

காஃபின் ட்ராப்ஸ்

ஆலியா தனது முகத்தில் காஃபின் சொல்யூஷன் ட்ராப்ஸ்களை பயன்படுத்துகிறார். இதை பயன்படுத்துவதற்கு ஒரு முறை நீங்கள் பேட்ச் டெஸ்ட் செய்து பயன்படுத்துவது நல்லது. ஒரு தோல் மருத்துவரை ஆலோசனை பெற்று பயன்படுத்துங்கள்.

மாய்ஸ்சரைசர்

ஆலியா பட் லேசான மாய்ஸ்ரைசர்களை முகத்துக்கு பயன்படுத்துகிறார். சீரம் உறிஞ்சப்பட்டவுடன், சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைக்க ஒரு லேசான மாய்ஸ்சரைசரையும் பயன்படுத்துங்கள். குளிர் மற்றும் வெயில் காலநிலையை பொறுத்து உங்கள் தோலுக்கு தகுந்தார் போல் மாயஸ்டரைசரை தேர்ந்தெடுப்பது நல்லது.

லிப் பாம்

கடைசியானது மற்றும் முக்கியமானதும் நம் உதடு பராமரிப்பு. உதடுகளை மென்மையாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க வைத்திருக்க லிப் பாம் முக்கியமானது. உதடுகளில் வெடிப்பு மற்றும் கீரல்கள் வறண்ட தன்மை போக்க பயன்படுகிறது. அலியா பட் எப்போதும் என் பையில் ஒரு லிப் பாம் வைத்திருப்பேன், எதுவாக இருந்தாலும் சரி என்று கூறியுள்ளார்.

இந்த வழிமுறைகளைத் தவிர ஆலியா பட் சரிவிகித சமநிலையான ஆரோக்கியமான உணவு பழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் செய்து தன் பிட்னஸ் மற்றும் அழகை தக்க வைத்துக் கொள்கிறார். உங்கள் சருமம் பளபளக்க நீங்களும் ஆலியா பட் பின்பற்றும் வழிமுறைகளை முயற்சி செய்து பாருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share