ADVERTISEMENT

சருமம், தலைமுடி பாதுகாப்புக்கு உதவும் தயிர் – இவ்வளவு நன்மைகள் உண்டா?

Published On:

| By Santhosh Raj Saravanan

curd naturally helps skin and hair

தயிரை உணவுப் பொருளாக மட்டுமல்லாமல் சருமத்திற்கும், தலைமுடிக்கும் கூட பயன்படுத்தி உங்களின் அழகை மேலும் மெருகூட்டிக்கொள்ளலாம்.

தயிரை வழக்கமாக நாம் உணவுக்கு மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். தயிர் சாப்பிட்டால் உடல்நலனுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதே சமயம் தயிரை நாம் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல முகத்திற்கும், தலை முடி ஆரோக்கியத்திற்கும் கூட பயன்படுத்தலாம். தயிரில் அமினோ அமிலங்கள் உள்ளது. அவை உங்கள் தலைமுடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மாற்றும். மேலும் முடிக்கு ஊட்டச்சத்து அளித்து வலிமைப்படுத்தும். சருமப் பிரச்சனை உள்ளவர்கள், கூந்தல் பிரச்சனை உடையவர்களுக்கு தயிர் மிகவும் நல்லது. தயிர் சருமத்தை பளபளப்பாகவும் கூந்தலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

ADVERTISEMENT

முகத்துக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?

ஒரு கிண்ணத்தில் ஒரு கப் தயிரை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் சிறிதளவு கடலை மாவு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதை முகத்தில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இது முகத்திற்கு பளபளப்பை தருவதோடு சூரிய ஒளியினால் ஏற்பட்ட கருமையை போக்கும்.

ADVERTISEMENT

தயிர் ஸ்கிரப்

எண்ணெய் சருமம் உள்ளவர்களுக்கு தயிர் ஸ்கிரப் மிகவும் நல்லது. இந்த ஸ்கிரப் தயாரிக்க தயிரில் சிறிதளவு அரிசி மாவு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் மற்றும் தேன் கலந்துகொள்ள வேண்டும். அதனை முகத்தில் அப்ளை செய்து மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சிறிது நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலம்தான் சரும பராமரிப்புக்கு காரணம் என கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

ADVERTISEMENT

தலை முடிக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?

தலைக்கு குளிக்கும் போது ஷாம்பு போடுவதற்கு முன்பாக தயிரை முடிகளில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கூந்தலுக்கு புரதம் கிடைக்கும். குறிப்பாக வறண்ட முடி உள்ளவர்களுக்கு தயிர் ரொம்பவே நல்லது.

தலை முடிக்கு தயிரை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்?

தலைமுடிக்கு விலை உயர்ந்த கன்டீஷனர் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரை பயன்படுத்துவது நல்லது, பாதுகாப்பானதும் கூட. இது தலைமுடியை மென்மையாக மாற்ற உதவும். தயிர் தலைமுடியை சுத்தமாக வைக்கவும் உதவும். தயிரின் மிகப்பெரிய நன்மை என்னவென்றால் அது ஓர் இயற்கை ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share