SMURFS : விமர்சனம்!

Published On:

| By uthay Padagalingam

sumrfs movie review july 18

எப்பூடி ‘இப்படி’ கதை சொல்றாங்க..!

அனிமேஷன் படங்கள் பார்ப்பதென்பது கிட்டத்தட்ட தியானத்திற்கு ஒப்பானது. நிகழ்கால நிஜங்களில் இருந்து நம்மை விடுவித்து வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கிற வித்தையை அப்படங்கள் திறம்படச் செய்யும். என்ன, ‘அனிமேஷன் படங்கள்லாம் குழந்தைங்க பார்க்கறது’ என்ற மனநிலையைக் கொள்ளாமல் இருந்தால் அது நிகழும்.

அப்படியொரு மனநிலையோடு ‘ஸ்மர்ஃப்ஸ்’ (SMURFS) பார்க்கச் சென்றால் நமக்கு எத்தகைய திரையனுபவம் கிடைக்கும்..? sumrfs movie review july 18

ADVERTISEMENT

‘அதே’ கதை! sumrfs movie review july 18

’குங்பூ பாண்டா’, ‘பைண்டிங் நிமோ’ போல, பிரமாண்டமாகத் தயாரிக்கப்படும் அனிமேஷன் படங்களுக்கென்று ஒரு ‘பார்முலா’ உண்டு. தனது சிறப்புகள் என்னவென்று அறியாமல் தாழ்வு மனப்பான்மையில் உழல்கிற நாயகன் அல்லது நாயகிக்குத் தன்னை உணர்கிற ஒரு அசாதாரணமான சூழல் வாய்த்தால் என்ன நிகழும் என்பதாக அப்படங்களின் கதைகள் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட ’அதே’ கதை தான் ‘ஸ்மர்ஃப்ஸ்’ஸிலும் இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த உலகைக் காக்கிற நான்கு புத்தகங்களில் மூன்றைத் தம் வசப்படுத்துகின்றன எதிர்மறை சக்திகள். ஒரு புத்தகம் அவர்கள் பிடியில் இருந்து நழுவிச் செல்கிறது.

பாபா ஸ்மார்ஃப் என்பவரால் அந்த புத்தகம் பூமியில் உள்ள ‘ஸ்மார்ஃப்’ கிராமத்தில் பத்திரமாக ஒளித்து வைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

மூன்று எதிர்மறை சக்திகள் ஒன்றுசேர்ந்து, தமது அடியாளான கார்கமெல் மூலமாகப் பிரபஞ்சம் முழுவதும் அந்த நான்காவது புத்தகத்தைச் சல்லடை போட்டுத் தேடுகின்றன. ஆனால், உரிய பலன் கிடைப்பதாக இல்லை. இந்த நிலை நூறு ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்கிறது.

ஸ்மர்ஃப் கிராமத்தில் ஒவ்வொரு ஸ்மார்ஃபும் தமக்கென்று தனிச்சிறப்புகளைக் கொண்டிருப்பதால், அதற்கேற்ற பெயர்களையும் பெறுகின்றனர். ஆனால், அப்படி எந்தச் சிறப்பையும் கண்டறியாததால் ‘பெயரற்றவராக’ (NO NAME) இருந்து வருகிறது ஒரு ஸ்மர்ஃப். அதன் தோழியான ‘ஸ்மபெட்’ தான் அந்த நேரங்களில் அதனை ஆற்றுப்படுத்துகிறது.

ஒருநாள் தன்னிடம் ‘மேஜிக்’ சக்தி இருப்பதாக உணர்கிறது அந்த ‘நோ நேம்’ ஸ்மர்ஃப். அதனைத் தனது சகாக்களுக்குத் தெரியப்படுத்த முயற்சிக்கிறது.

அப்போது, அதன் மேஜிக் பூமியைத் தாண்டி பிரபஞ்ச வெளியைச் சென்றடைகிறது. சாத்தானின் அடியாளான கார்கமெலுக்கு ‘ஸ்மர்ஃப்’ கிராமம் இருக்குமிடம் தெரிய வருகிறது.

அடுத்த நொடியே, அந்த கிராமத்தை வழிநடத்திய ‘பாபா ஸ்மர்ஃப்’பை சிறை பிடிக்கிறது கார்கமெல். தான் கடத்தப்படுவதற்கு முன்பாக, ‘எப்படியாவது கென்னை கண்டுபிடிங்க’ என்கிறார் பாபா ஸ்மர்ஃப்.

தான் செய்த தவறால்தான் பாபா ஸ்மர்ஃப் கடத்தப்பட்டார் என்ற வருத்தத்தில் இருக்கும் நோ நேம் ஸ்மர்ஃப், ஸ்மபெட் உடன் இணைந்து அதற்கான முயற்சியில் இறங்குகிறது. அதனைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் இருக்கும் இதர ஸ்மர்ஃபுகளும் சிக்கலில் மாட்டிக் கொள்கின்றன.

அந்த சிக்கல் எத்தகையது? எதிர்மறை சக்திகளால் அந்த நான்காவது புத்தகம் இருக்குமிடத்தை அறிய முடிந்ததா? அதன்பின் என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

அபார கற்பனை! sumrfs movie review july 18

அமெரிக்கப் பாடகியும் நடிகையுமான ரிஹானா, ஜேம்ஸ் கோர்டன், ஜான் குட்மேன் உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் இப்படத்திற்குத் தங்களது குரலை இரவல் தந்திருக்கின்றனர்.

பீட்டர் லியோன்ஸ் கொலீஸ்டர் ஒளிப்பதிவையும் மேட் லாண்டன் படத்தொகுப்பையும் ஹென்றி ஜாக்மேன் இசையமைப்பையும் மேக்ஸ் பொயஸ் தயாரிப்பு வடிவமைப்பையும் கையாண்டிருக்கின்றனர்.

பெல்ஜியத்தைச் சேர்ந்த பியர் கலிபோர்ட் எனப்படும் பீயோ என்ற கார்ட்டூனிஸ்டால் உருவாக்கப்பட்டது ‘ஸ்மர்ஃப்ஸ்’. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இப்பாத்திரங்களைக் கொண்டு சில திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தி ஸ்மர்ஃப்ஸ், தி ஸ்மர்ஃப்ஸ் 2 ஆகியன அதில் குறிப்பிடத்தக்கவை.

பாரமவுண்ட் அனிமேஷன் மற்றும் நிகில்டியோன் தயாரிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது இந்த ‘ஸ்மர்ஃப்ஸ்’.

பாம் ப்ராடி இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டுள்ளார். இதனை இயக்கியிருக்கிறார் கிறிஸ் மில்லர்.

ஸ்மர்ஃப் கிராமம், எதிர்மறை சக்திகளின் இருப்பிடம், இரண்டுக்கும் இடையேயுள்ள பிரபஞ்ச வெளி என்று பல்வேறுபட்ட இடங்களைக் காட்டுகிறது ’ஸ்மர்ஃப்ஸ்’ கதை. இடையிடையே பாரிஸ் நகரம் உள்ளிட்ட சில இடங்களுக்கும் பிரபஞ்சத்தில் உள்ள ‘பிளாக் ஹோல்’ உள்ளிட்டவற்றுக்கும் பயணிக்கிறது.

’என்னங்கடா இஷ்டத்துக்கு கதை விடுறீங்க’ என்பதாக ‘ஸ்மர்ஃப்ஸ்’ படக்காட்சிகள் இருந்தாலும், இதிலிருக்கும் நகைச்சுவையும் சாகசத்தன்மையும் ‘ஆஹா’ ரகம். ஒரு குழந்தையின் மனநிலையோடு அதனைப் பார்க்க உட்கார்ந்தால் நாம் அடைகிற அனுபவமே தனி தான்.. ஒருகட்டத்தில் ‘எப்பூடி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க’ என்று வியக்கும் அளவுக்கு அந்த கதை சொல்லல் இருக்கும். பெரும்பாலான அனிமேஷன் படங்கள் அப்படியொரு மனநிலையை உருவாக்கும் நோக்கிலேயே உருவாக்கப்படுகின்றன.

லாஜிக் மீறல்கள் என்ற வார்த்தைகளுக்கு இடம் கொடுக்காமல், அனிமேஷன் படங்களைப் பார்ப்பதற்கான பிரத்யேக மனநிலையோடு அமர்ந்தால் ‘ஸ்மர்ஃப்ஸ்’ உங்களைச் சுமார் ஒன்றரை மணி நேரம் கட்டிப் போடும்.. அது வேண்டும் என்பவர்கள் தாராளமாகக் குழந்தைகளோடு தியேட்டருக்குச் செல்லலாம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share