VIDEO: அமைச்சர் பிரபு முன்னிலையில் “TVK TVK” கோஷம் போடும் மாணவர்கள்- புதிய சர்ச்சை!

Published On:

| By Mathi

Students chanting

தமிழக அமைச்சர் பிரபு முன்னிலையில் பள்ளி மாணவர்கள் TVK TVK என கோஷம் போடுகிற வீடியோ சர்ச்சையாகி உள்ளது.

தமிழக அமைச்சர்கள் பள்ளிகளுக்கு சென்று முதல்வர் விஜய் படத்தை மாட்டுவது, தவெக துண்டுகளை மாணவர்களுக்கு அணிவிப்பது, மாணவர்களை வைத்து ரீல்ஸ் போட்டுக் கொள்வது என முகம் சுளிக்க வைத்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இது மிகப் பெரும் சர்ச்சையான நிலையில், அமைச்சர்களின் ‘ரீல்ஸ்’ படப்பிடிப்புகளுக்கு முதல்வர் விஜய் ‘தடை’ விதித்துவிட்டதாக கூறப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகனும், பள்ளிகளில் ரீல்ஸ் போடக் கூடாது என உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

ADVERTISEMENT

இந்த நிலையில் காரைக்குடியில் பள்ளி ஒன்றில், மாணவர்கள் TVK TVK கூச்சலிடுவதை அமைச்சர் பிரபு ரசித்துக் கொண்டிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

அத்துடன், பள்ளி மாணவர்களை ரீல்ஸ் கண்டெட்டுகளாக பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் என்றால் ஏன் அமைச்சர் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை? என்கிற கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன.

ADVERTISEMENT

வீடியோ

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share