மாநில சுயாட்சி தீர்மானம் கண் துடைப்பு நாடகம் : அதிமுக வெளிநடப்பு!

Published On:

| By Kavi

மாநில சுயாட்சி குறித்த தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 15) கொண்டு வந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். State autonomy resolution is a drama

5 நாள் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது, மாநில சுயாட்சி தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படுகிறது என்று தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

முதல்வர் பேசிக்கொண்டிருக்கும் போதே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.பி. உதயக்குமார், “ நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. எனவே இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.

அதுபோன்று அமைச்சர் பொன்முடி, பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருக்கிறார். தான் பதவி ஏற்கும் போது ஏற்ற உறுதி மொழியை மீறியிருக்கிறார். அதனால் அவர் மீதும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம்.

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தோம், ஆனால் இது பற்றி பேச எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

கேள்வி நேரம் முடியும் வரை நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதனால் வெளிநடப்பு செய்தோம். இன்று மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தது கண் துடைப்பு நாடகம். இவர்கள் மத்தியிலும் ஆட்சியில் இருந்தார்கள். அப்போது இதுபற்றி பேசாமல் இப்போது தீர்மானம் கொண்டு வருவது ஏன். இது முற்றிலும் ஏமாற்று வேலை” என்று கூறினார். State autonomy resolution is a drama

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share