புரட்சி கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் 136 ஆவது பிறந்தநாள் இன்று (ஏப்ரல் 29) கொண்டாடப்படுகிறது. இதையாட்டி சென்னை மெரினா கடற்கரை காமராசர் சாலையில் அமைந்துள்ள பாரதிதாசன் திருவுருவச் சிலைக்கு தமிழக அரசு சார்பில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட உள்ளது.
பாவேந்தரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் பதிவில், “தமிழெனும் ஆயுதமேந்தி இனமானம் உரைத்த பாவேந்தர் புகழ் வாழியவே!
தமிழின் இனிமையையும் தமிழரின் உயர்வுக்கான வழியையும் தன் கவிதையால் காட்டியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.
பாவேந்தரின் திண்மை நிறை தமிழ், ஒளியென நம் இனத்திற்குத் துணை நிற்கட்டும்!”என குறிப்பிட்டுள்ளார்.
