தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: பக்தவச்சலம், ஜெயலலிதா வரிசையில் தோல்வி முகத்தில் ஸ்டாலின்

Published On:

| By Kavi

தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர்களாக இருந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள் பக்தவச்சலம், ஜெயலலிதா. தற்போதைய தேர்தலில் முதல்வர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தோல்வி முகத்தில் உள்ளார்.

1967-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அப்போது முதல்வராக இருந்த பக்தவச்சலம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் திமுகவின் ராசரத்தினத்திடம் 8,926 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வராக இருந்த பக்தவச்சலம் தோல்வியைத் தழுவினார்.

ADVERTISEMENT

1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா, பர்கூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். அத்தேர்தலில் திமுகவின் இஜி சுகவனத்திடம் 8,366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார் முதல்வராக இருந்த ஜெயலலிதா.

தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். இத்தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு 19 சுற்றுகள் முடிவில் 8284 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதால் முதல்வர் ஸ்டாலின் தோல்வி முகத்தில் உள்ளார்.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share