அதிமுக எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்களும் இன்று (ஏப்ரல் 15) சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். Stalin is inciting separatism Nainar Nagendran
தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் விதி எண் 110ன் கீழ் கொண்டுவந்தார்.
இந்தநிலையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், அவர்களை தொடர்ந்து பாஜக எம்.எல்.ஏ.க்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாநிலங்களை பிரிக்க வேண்டும் என்று பிரிவினைவாதத்தைத் தான் தூண்டுகின்றனர். நம் நாடு வல்லரசு ஆக வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு இல்லை. முதல்வர் ஸ்டாலின் தனி தமிழ்நாடு, தனி கொடி வேண்டும் என்று நினைக்கிறார், ஆனால் நம் நாடு வல்லரசு ஆக வேண்டும் என்றால், அனைத்து மாநிலங்களும் ஒன்றாக இருக்க வேண்டும். தேர்தல் வரவிருப்பதால் இதுபோன்று தீர்மானம் கொண்டு வருகிறார்கள்” என்று கூறினார். Stalin is inciting separatism Nainar Nagendran