செங்கல் அடுக்குதல்… வீடு கட்ட முடியுமா? – திருவண்ணாமலையில் வினோதம்!

Published On:

| By Kavi

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செங்கல்லை அடுக்கி வைத்து வழிபடும் நடைமுறை அதிகரித்துள்ளது.

உலக புகழ் பெற்ற திருப்பதி கோயிலுக்கு நடந்து செல்லும் போது, கற்கள் ஒன்றன் மீது ஒன்று அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்க்க முடியும். அப்படி வைத்தால் விரைவில் வீடு கட்ட முடியும் என்று நம்பப்படுகிறது.

ADVERTISEMENT

அதுபோன்று தற்போது திருவண்ணாமலை கோயிலிலும் செங்கற்கள் வைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

சமீப நாட்களாக திருவண்ணாமலை கோயிலுக்கு ஆந்திர பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 25) திருவண்ணாமலை கோயில் வளாகத்தில் செங்கற்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது.

அதோடு கோயில் வளாகத்தில் அதிகளவிலான செங்கல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் அவற்றை அப்புறப்படுத்தினர்.

ADVERTISEMENT

கோயிலில் இனி இதுபோன்று கற்களை வைக்கக்கூடாது என கோயில் நிர்வாகத்தினர் பக்தர்களுக்கு அறிவுறுத்தினர்.

திருவண்ணாமலை கோயிலுக்கு நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகைத் தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share