சொத்து வரியை வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தினால் 5% சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Special offer for property tax payers
தமிழக அளவில் சென்னை, கோவைக்கு அடுத்து மதுரை மாநகராட்சியில் சொத்து வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது. மதுரை மாநகராட்சியில் 3 லட்சத்துக்கும் அதிகமான சொத்து வரி நிர்ணயிக்கப்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இது மாநகராட்சியின் முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது.
2024-25 நிதியாண்டுக்கான மதுரை மாநகராட்சியின் சொத்து வரி வசூல் இலக்கு ரூ.254.53 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை தாண்டி, மதுரை மாநகராட்சி ரூ.4.5 கோடி கூடுதலாக வசூல் செய்தது.
இந்தநிலையில் தற்போது சொத்து வரி செலுத்துபவர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதன்படி, மதுரை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரிகளை வரும் ஏப்ரல் 30-ம் தேதிக்குள் செலுத்தினால் 5% (அதிகபட்சம் ரூ.5 ஆயிரம்) சிறப்பு சலுகை வழங்கப்படும். மேலும், வரிகள் செலுத்த வசதியாக மாநகராட்சி வரிவசூல் மையங்கள், ஏப்ரல் மாதம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் செயல்படும் என்று கூறியுள்ளது. Special offer for property tax payers