தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் சந்தித்து பேசியுள்ளார்.
17ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 8-ஆம் தேதி நிறைவடைந்தது.
மொத்தம் 28 நாட்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்தநிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
17-வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதலாவது பட்ஜெட் கூட்டத்தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக ஆளுநரை சபாநாயகர் சந்தித்தார் என்று மக்கள் பவன் கூறியுள்ளது.
சட்டமன்றத்தின் செயல்பாடு மற்றும் தமிழ்நாட்டின் ஜனநாயக வழிமுறைகள் குறித்த பல்வேறு விஷயங்கள் தொடர்பாக ஆளுநரும், சபாநாயகரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என்றும் தெரிவித்துள்ளது.
