அமித்ஷா தலைமையில் தென் மண்டல கவுன்சில் கூட்டம்: தெலுங்கானா, புதுவை முதல்வர்கள் ‘ஆப்சென்ட்’

Published On:

| By Mathi

Southern Zonal Council Meeting: Telangana and Puducherry CMs Absent

தென் மாநிலங்களின் தென் மண்டல கவுன்சில் கூட்டத்தை தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி பங்கேற்கவில்லை.

சென்னையை அடுத்த கோவளத்தில் தென் மண்டல கவுன்சில் கூட்டம் இன்று ஆகஸ்ட் 20-ந் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் விஜய், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரளா முதல்வர் சதீஷன், கர்நாடகா முதல்வர் டிகே சிவகுமார் பங்கேற்றுள்ளனர்.

ADVERTISEMENT

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவருக்கு பதில் தெலுங்கானா துணை முதல்வர் மல்லு விக்ரமார்கா பங்கேற்றுள்ளார்.

புதுச்சேரி யூனியன் பிரதேச முதல்வர் ரங்கசாமி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளார்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் காவிரி நதிநீர் பிரச்சனை, தொகுதி மறுவரையறை பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share