பாடகி ஜானகி மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பாடகி ஜானகி இன்று (ஜூலை 11) தனது 88 வயதில் நம்மை விட்டு பிரிந்தார். அவரது மறைவு திரை உலகையும், இசை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் அவரது மறைவுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ”பிரபல பின்னணி பாடகி திருமதி. S ஜானகி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
பல தலைமுறைகளின் இதயங்களை தனது இனிமையான குரலால் வருடிய ஜானகி, தனது ஆயிரக்கணக்கான பாடல்கள் வழியாக மக்களின் வாழ்வின் ஒவ்வொரு உணர்வுக்கும் குரலாக இருந்தவர்.
தமிழ் உள்ளிட்ட 20 இந்திய மொழிகளில் பின்னணி குரலாக ஒலித்து அவர் பாடிய கீதங்கள் மக்கள் மனங்களில் என்றும் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளன. அவரது மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரை மற்றும் இசைத் துறைகளைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று கூறி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் ஜானகி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
