பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி(88) இன்று (ஜூலை 11) காலமானார்.
பத்மபூஷன் விருது பெற்ற எஸ்.ஜானகி ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் பிறந்தவர்.
சிறு வயது முதலே பாடல்களை பாடி வந்த, இவர் 17க்கும் மேற்பட்ட மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
“தென்னிந்தியாவின் நைட்டிங்கேல்” என்று அன்போடு அழைக்கப்படுபவர்.
எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ ஆர் ரகுமான். அனிருத் என அன்று முதல் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார்.
தமிழ் இந்தி,தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் பாடி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர்.
இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக இன்று (ஜூலை 11) மைசூரில் பாடகி ஜானகி காலமானார்.
அவரது மறைவு ஒட்டுமொத்த இசை பிரியர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
