நாம் தமிழர் அலுவலகத்தில் செழியன் உடல் : பொதுமக்கள் அஞ்சலி!

Published On:

| By Kavi

மறைந்த ஒளிப்பதிவாளர் செழியனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான இரா.செழியன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (ஜூலை 10) காலமானார்.

ADVERTISEMENT

யதார்த்த படைப்புகளை காட்சிகள் வாயிலாக காட்டுவதில் பிரபலமானவர் செழியன். புதிய படைப்பாளிகளை உருவாக்கும் நோக்கில் செழியன் ’தி ப்லிம் ஸ்கூல்; என்ற பயிற்சி மையத்தையும் நடத்தினார். இதில் பயின்ற 34 பேர் ஒரே நேரத்தில் படம் இயக்கும் வாய்ப்பை பெற்றனர்.  சமீபத்தில் தான் இதற்கான விழாவும் சென்னையில் நடைபெற்றது.

இந்தசூழலில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோரது மறைவை தொடர்ந்து செழியனின் மறைவும் திரையுலகினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ADVERTISEMENT

தற்போது செழியனின் உடல்  சென்னை, சின்னப்போரூரில் உள்ள  நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் பொதுமக்கள்  அஞ்சலி செலுத்துவதற்காக  வைக்கப்பட்டுள்ளது.  திரையுலகினரும், பொதுமக்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share