VIDEO: சுசீந்திரன் இயக்கம்.. சாந்தனு- சீமான் இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’- போஸ்டர் ரிலீஸ்!

Published On:

| By Mathi

Shanthanu, Seeman Join Hands for "Oru Kaidhiyin Diary"- Poster Release

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ்- சீமான் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஒரு கைதியின் டைரி’.

கண்ணன் ரவி குரூப்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, வில் அம்பு, மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், வெண்ணிலா கபடி குழு-2, கென்னடி கிளப், சாம்பியன், ஈஸ்வரன் படங்களை இயக்கியவர் சுசீந்திரன்.

வாய்மை, கோடிட்ட இடங்களை நிரப்புக, முப்பரிமானம், பாவ கதைகள்,
முருங்கைகாய் சிப்ஸ், மாஸ்டர், கசட தபற, இராவண கோட்டம், ப்ளூ ஸ்டார் படங்களில் நடித்த சாந்தனு பாக்யராஜூக்கு இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

இயக்குநராக, நடிகராக இன்று தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் ஆளுமையாக, நாம் தமிழர் கட்சி என்ற தமிழ்த் தேசியம் பேசும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் முக்கிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் நடிக்கிறார்.

1985-ல் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் இயக்கத்தில், பாக்யராஜின் கதை அமைப்பில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மாபெரும் வெற்றிப் படம் ‘ஒரு கைதியின் டைரி’. அதே தலைப்பை பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் பயன்படுத்தி இருப்பது படத்தின் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share