ஓபிஎஸ், டிடிவியுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை – செங்கோட்டையன் ஓபன் டாக்

Published On:

| By Pandeeswari Gurusamy

டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருடன் பேசிக்கொண்டிருப்பது உண்மை. ஆனால் அவர்கள் எப்போது முடிவுகளை எடுப்பார்கள் என்பது தெரியவில்லை என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக்கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று (டிசம்பர் 24) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

தமிழக வெற்றிக் கழகத்துடன் , ஓபிஎஸ் அணி வர வாய்ப்பு இருக்கின்றதா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு , “ஓ.பன்னீர் செல்வத்தைப் பொறுத்தவரை நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
அனைத்து மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோர் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்த கருத்தின் அடிப்படையில் இரண்டு நாட்களில் நல்ல முடிவு எடுப்பதாக பேசியிருக்கின்றனர்.

எந்த காலகட்டத்திலும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கின்ற அதிமுகவில் இணைக்க போவது இல்லை, துரோகத்திற்கு இடமளிக்க போவதில்லை என தெரிவித்துள்ளார். விரைவில் நல்ல முடிவுகளைப் மேற்கொள்வார்கள்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

காங்கிரஸ் கட்சியுடன் தவெக இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ,
அதுபோன்ற கருத்துக்கள் இல்லை. இணைய வேண்டிய இடத்தில் இணைவோம்.

ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
கொள்கை ரீதியாக யாரை எதிர்க்கிறோம் என்பதை மக்களே கோஷமிட்டார்கள். என்னைப் பொறுத்த வரையில் பொங்கல் முடிந்த பிறகு ஒரு திருப்பு முனையைப் பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகைக்கு பிறகு நல்ல முடிவுகளை பார்க்கலாம்.

ADVERTISEMENT

அதிமுகவில் இருந்து சிலர் வருவார்களா என கேட்டால் , வருவார்கள். பாஜகவை கொள்கை ரீதியாக எதிர்க்கிறோம் என்ன சொல்லி இருக்கின்றோம் என்றார்

டிடிவி, ஓபிஎஸ் ஆகியோருடன் பேசப்படுகின்றதா என்ற கேள்விக்கு,
ஒவ்வொருவரும் ஒவ்வொருவருடன் பேசிக்கொண்டு இருப்பது உண்மை. அதே நேரத்தில் அவர்கள் எப்போது முடிவுகளை மேற்கொள்வார்கள் என்பது தெரியவில்லை. தவெகவில் என்னைப் போன்றவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர், நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்” என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தவெகவில் என்னுடைய பயணத்தைப் பொறுத்தவரை புரட்சித் தலைவர், புரட்சித்தலைவியிடம் இருந்தது போல மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் அவர்களுக்கு வரும் 27 ,28 மலேசியாவில் நிகழ்ச்சி அந்த நிகழ்ச்சிக்கு பிறகு எந்தெந்த மாவட்டத்தில் சுற்றுப்பயணம் என்பது குறித்து சொல்வார்கள் என்றார்.

மலேசியாவில் கட்டுப்பாடுகள் விதித்து இருப்பது குறித்த கேள்விக்கு , கட்டுப்பாடுகள் என்பது தொடர்ந்து கொடுக்கப்படுகிறது. அதை எல்லாம் தாண்டி விஜய் மக்கள் மனதில் நின்று கொண்டு இருக்கிறார்.

விஜய் 2026 ல் மக்களால் ஆட்சி பீடத்தில் அமர்வதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. புரட்சித்தலைவர் இயக்கம் தொடங்கியபோது மக்கள் அலை எப்படி வந்ததோ, அதைப்போலவே அலை இவருக்கும் வந்து கொண்டு இருக்கிறது. மற்றவர்கள் கூட்டத்தை கூட்டுவதற்கு செலவு செய்கின்றனர். ஆனால் செலவு செய்யாமல் கூட்டம் கூடும் தலைவராக மக்கள் தலைவராக விஜய் இருக்கிறார். இவர் எதிர்காலத் தமிழகத்தை ஆள வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றார்.

கொங்கு மண்டலத்தில் திமுக தீவிரமாக பணியாற்றி வருவது குறித்த கேள்விக்கு,
கொங்கு மண்டலத்தை யார் பிடிக்கிறார்கள் என்பதை தேர்தல் களத்தில் பார்க்கலாம் .கொங்கு மண்டலத்தில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி வாகை சூடும் என நம்பிக்கை தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share