மோடி விழாவில் முதல்வர் விஜய் கருநீல உடை அணிந்தது ஏன்?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

தவெக ஆட்சி அமைந்த பிறகு பிரதமர் மோடி அக்டோபர் 11-ஆம் தேதி முதல் முறையாக சென்னை வருகை தந்தார். சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது ஆளுநர் அர்லேகர், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை வந்த பிரதமர் சுமார் ரூ.4,900 கோடி செலவில் கட்டப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டமான பூந்தமல்லி-வடபழனி வழித்தடத்தை முதல்வர் விஜய்யுடன் இணைந்து தொடங்கி வைத்தார். அன்று பிற்பகலில் சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் மோடி, முதல்வர் விஜய்யுடன் கூட்டாக இணைந்து அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பிரதமர் மோடி வருகையின் போது முதல்வர் விஜய் கருநீல நிற உடையில் இருந்தார். அதேசமயம் பிரதமர் மோடியை முதல்வர் விஜய் கருப்பு உடையில் வரவேற்றாரா? அல்லது அடர் நீல நிற உடையில் வரவேற்றாரா? என ஒரு பக்கம் விவாதம் நடக்க, சமூக வலைதளங்களில் “மோடியைக் கருப்பு உடையில் விஜய் வரவேற்றார்” எனத் தவெகவினர் பதிவிட்டனர்.

இந்நிலையில் நேற்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் “பிரதமர் வருகையின் போது முதல்வர் விஜய் கருநீல உடை அணிந்து வந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு “வெள்ளிக்கிழமை மட்டும்தான் அவர் பட்டு வேட்டி சட்டை அணிவார், மற்ற நாட்களில் வழக்கமான உடைதான் அணிவார்” என தெரிவித்தார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share