சீமான் வீட்டுக்கு செல்லும் கோவை ராமகிருஷ்ணன்… என்ன தான் பிரச்சனை?

Published On:

| By Selvam

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கான ஆதாரம் கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் நாளை (ஜனவரி 9) சீமான் வீட்டிற்கு செல்ல இருப்பதாக இன்று (ஜனவரி 8) தெரிவித்துள்ளார்.

கடலூரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “பெரியார் கொள்கை வழிகாட்டியா? உனக்கு உடல் இச்சை வந்தால், பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று பெரியார் சொன்னது பெண்ணிய உரிமையா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் இராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில், “பெரியார் பற்றி இழிவான செய்தியை பத்திரிகையாளர் சந்திப்பின் போது சீமான் பேசியிருக்கிறார். இது தமிழ் சமூகம் ஏற்றுக்கொள்ள முடியாது.

பெரியார் அப்படி சொன்னார் என்பதற்கான ஆதாரத்தை காட்டவில்லை என்றால், நாளை காலை 10 மணிக்கு நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டிற்கு நான் செல்ல இருக்கின்றேன். பெரியார் சொன்னதற்கான ஆதாரத்தை சீமான் என்னிடம் காட்ட வேண்டும். அப்படி அவர் காட்டவில்லை என்றால் மக்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

ADVERTISEMENT

ஆளுநர் உத்தரவு… அண்ணா பல்கலையில் அதிரடி மாற்றம்!

இது முதல் முறையல்ல… அதிகார மோதலால் பாதுகாப்பின்றி பரிதவிக்கும் அண்ணா பல்கலை!

Photo of author
Selvam

இதையும் படிங்க!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share