அரசு ஊழியர்களுக்கான திட்டம் : ரூ.838 கோடி ஒதுக்கீடு!

Published On:

| By Kavi

அரசு  ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு 838 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்துள்ளார். 

இன்று தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 

ADVERTISEMENT

அதில் அரசு ஊழியர்களுக்கான அறிவிப்பில், அடிப்படை காப்பீடு 5 லட்சம் ரூபாயிலிருந்து 7.5 லட்சமாக உயர்வு, 

குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 லட்சம் வரை உயர்வு, 

ADVERTISEMENT

அரிய நோய்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை நிதி உதவி 

2992 சிகிச்சைகள் மற்றும் 1535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் இந்த காப்பீடு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  இதற்காக  838 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வு கால நன்மைகளுக்கு 47, 240 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share