யூடியூபர் சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யூடியூப்ர் சவுக்கு சங்கர் 2013 ஆம் ஆண்டு வாக்கில் சவுக்கு. நெட் என்ற இணையதள பக்கத்தை நடத்தி வந்தார்.
இதில் சன் தொலைக்காட்சியில் பணியாற்றிய தொகுப்பாளரான வழக்கறிஞர் மகாலட்சுமி, தன்னை பற்றி அவதூறாக எழுதியதாக சவுக்கு சங்கர் மீது 2014 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் இந்திய தண்டனைச் சட்டம் 509 மற்றும் பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப்பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், இன்று சவுக்கு சங்கர் குற்றவாளி என சென்னை எழும்பூர் கூடுதல் தலைமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதித்துறை நடுவர் சிவசக்தி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.. இந்த கால அவகாசத்துக்குள் அவர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
