சாட்டை யூடியூப் சேனலில் இடம்பெறும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் சாட்டை துரைமுகனின் தனிப்பட்ட கருத்து என்று சீமான் கூறியுள்ளார். sattai Channel has no connection with ntk party
இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிக்கையில், “துரைமுருகன் நடத்தும் வலையொளிக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வருகின்ற கருத்துகள் செய்திகள் அனைத்தும் அவரது சொந்த கருத்தாகும். அதற்கு எந்த வகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று கூறியுள்ளார்.
சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளராக இருக்கக் கூடிய துரைமுருகன் நடத்தி வருகிறார்.
அதில் அரசியல் ரீதியாகவும், திரைப்பட விமர்சனம் ரீதியாகவும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார் துரைமுருகன். அண்மையில் நித்யானந்தாவின் கைலாசா குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நித்யானந்தாவும் பதிலளித்திருந்தார். அந்த வீடியோவையும் சாட்டை யூடியூப் சேனலில் பதிவேற்றியிருந்தார் துரைமுருகன்.
குறிப்பாக அரசியல் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்தநிலையில் சாட்டை துரைமுருகன் சேனலில் வெளியாகும் கருத்துக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பில்லை என்று கூறியுள்ளார் சீமான்.
இதனால் சீமானுக்கும் சாட்டை துரைமுருகனுக்கும் இடையே மோதலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. sattai Channel has no connection with ntk party