இரவிலும் நீடித்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்- விஜய் சந்திப்பாரா?

Published On:

| By Mathi

Sanitation Workers Continue All-Night Strike

சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (ஆகஸ்ட் 25) இரவிலும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து போராடும் தூய்மைப் பணியாளர்களை முதல்வர் விஜய் சந்தித்து பேசக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தலைமை செயலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற தூய்மை பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு குண்டு கட்டாக கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி வளாகத்தில் 6-வது நாளாக நேற்றும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நீடித்தது. அப்போது, மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனர். இதனால் செல்போன் வெளிச்சத்தில் போராட்டம் நடத்தப்பட்டது.

இதனிடையே தமிழக அரசு சார்பில் பாடநூல் கழகத் தலைவர் லயோலா மணி, தூய்மைப் பணியாளர்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

தங்களை முதல்வர் விஜய் நேரில் அழைத்து பேசும் வரை போராட்டம் தொடரும் என தூய்மைப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share