தன் மீது கங்கனா ராணாவத் வைத்த விமர்சனத்திறகு கீர்த்தி சனோன் பதிலடி கொடுத்துள்ளார்.
சமீபத்தில் நகைக் கடை விளம்பரம் ஒன்றில் கீர்த்தி சனோன் நடித்திருந்தார். ரக்ஷா பந்தனை முன்னிட்டு எடுக்கப்பட்ட இந்த விளம்பரத்தில் பிகினி உடையில் கீர்த்தி சனோன் ராக்கி கட்டுவது போல் எடுக்கப்பட்டிருந்தது.
இந்த விளம்பரத்தை விமர்சித்த நடிகையும் எம்பியுமான கங்கனா ராணாவத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சகோதரனுக்கு ராக்கி கட்டும் போது இப்படிப்பட்ட ஆடைகளையா அணிவார்கள்? எவ்வளவோ ஆடை வகைகள் உள்ளன. பெண்கள் தங்களுக்கு பிடித்தமான ஆடைகளை அணிய சுதந்திரம் இருந்தாலும் சில எல்லைகளை கடைபிடிக்க வேண்டும். உங்களது ஸ்டைலிங் தேர்வுகள் எல்லாம் எங்கே போனது?. இந்த விளம்பரம் அருவருப்பாக தோன்றுகிறது” என்று விமர்சித்து இருந்தார்.
இந்த பதிவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் ஒருசேர கமெண்ட்கள் குவிந்தன.
இந்த நிலையில் தன் மீதான விமர்சனத்திற்கு கீர்த்தி சனோன் பதிலடி கொடுத்துள்ளார்.
அவர் தனது பதிவில்,”ரக்ஷா பந்தன் என்பது பாதுகாப்பின் பிணைப்பு. நானும் எனது சகோதரியும் ஒருவருக்கு ஒருவர் ராக்கி கட்டி கொள்கிறோம். சகோதரனை விட எங்களால் ஒருவரை ஒருவர் பாதுகாக்க முடியும். ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்கிறோம். எங்களது நாய்களுக்காகவும் பிரார்த்தனையை செய்கிறோம். ஏனென்றால் அதுவும் எங்கள் குடும்பம் தானே?
பெண்கள் என்ன அணிய வேண்டும் என்ன அணிய கூடாது என்று சொல்வதை எப்போது நிறுத்தப் போகிறோம். பாரம்பரிய ஃபேஷன் பல ஆண்டுகளுக்கு முன்பே மாறிவிட்டது.. ஆனால் இப்போதும் பெண்களின் மரியாதை அவர்களின் ஆடைகளை வைத்து மட்டுமே அளவிடப்படுகிறது.
கலாச்சாரமும் பாரம்பரியமும் பெண்களின் இதயத்தில் இருக்கிறது. ஆடையில் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.
